தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாத 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 2 கம்பெனி துணை ராணுவ படையினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.ஒரு கம்பெனி திருநெல்வேலி மாநகர பகுதியிலும் மற்றொரு கம்பெனி திருநெல்வேலி ஊரக பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு விஷ்ணு அவர்கள் இன்று திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர்
தேர்தல் முடிவடைந்த பின்னர் வாக்குகளை எண்ண திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகளை எண்ண மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை ஆய்வு செய்தனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் சுற்றிலும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.

செய்தி தொகுப்பு: போலீஸ் செய்தி வெப் நியூஸ் சேனலுக்காக
சிறப்புச் செய்தியாளர் நெல்லை கொம்பன் ராஜ்

