தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் காமராஜர் காய்கனி மார்க்கெட் ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடி இல்லாத சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்த மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை அங்காடிகள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு வியாபாரிகள் அதிகாலை நான்கு மணி முதல் காலை 10 மணி வரை பொருட்கள் வந்து வாங்கி செல்வதால் அப்பகுதியில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்படுவதால் காலை பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் பள்ளி கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. என்பதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதே பகுதியில் பல அடுக்கு கொண்ட வாகன காப்பகம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதில் வாகனங்களை நிறுத்தி பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதை முறைப்படுத்தாமல் பொதுமக்கள் வியாபாரிகள் இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் மூலம் அப்பகுதியை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். இதில் வியாபாரிகள் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் சில மணி நேரம் மட்டுமே இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பிறகு சீரான நிலைக்கு வந்துவிடும்.
ஆகவே எங்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் வைத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், ஆகியோர் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு மார்க்கெட் பகுதி வியாபாரிகளிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு அமைச்சர் மாநகரத்தை பொறுத்தவரை இப்பகுதி வியாபாரிகளும் பாதிக்கப்படாத வகையில் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்தை நெரிசல் இல்லாத வகையில் பார்த்து கொள்வதற்கு அதிகாரிகளுடன் முழுமையாக கலந்து பேசி நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று கூறினார்.
பின்னர் ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின், மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட வியாபாரிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

