நாகப்பட்டினம் ஜூலை 3
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,05,500 மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தையும் இரண்டு மாற்றுத்திறனாளிக்கு ரூ.18,100 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிளையும், திருமருகல் ஒன்றியம் ரோட்டுத்தெருவைச் சேர்ந்த ஜெயாதேவி என்ற மாற்றுத்திறனாளிக்கு இன்றையதினம் மனு கொடுத்து உடனடிதீர்வாக காதோலி கருவியினையும், வருவாய்த்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பருக்குக்கும், விஜயராணி என்பவருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

