தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து போன் செய்து இரட்டை வாத்தையில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளாராம் இதனை அடுத்து அப்பெண் சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாக பேசுகிறார் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இது பற்றிய பெண்ணின் கணவர் உதவி ஆய்வாளர் சுதாகர் ரிடம் சென்று இதுபோல் தன் மனைவியே தொந்தரவு செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு உன்னை கைது செய்து உள்ளே வைத்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் இதனை அடுத்து பெண்ணும் அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இடம் நேரில் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்
கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் னிடம் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் சுதாகர் பாராட்டு சான்றிதழ் பெற்ற நிலையில் தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

