நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லேஷிப் சார்பில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு காணொளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூன் 22
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கொரோனா ஊரடங்கு கால கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவ குழந்தைகளுக்கு இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆடல் பாடல் விளையாட்டுகள் செயல்பாடுகள் மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். அதன்மூலம் குழந்தைகளின் திறமைகள் பலவற்றை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கின்றனர்.

2023-24 ஆம் கல்வியாண்டில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமானது வருகிற 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவை பெறுவதை உறுதி செய்வதாகும்
இதுபோல இந்தத் திட்டத்தில் உள்ள பல சிறப்பம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளி காட்சியானது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு காணொளி ஒன்று தஞ்சாவூர் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் குழுவினரால் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலோடு தயாரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் வலைதள பக்கத்தில் காணொளி ஆனது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது திரு.பானோத் ம்ருகேந்தர்லால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்..கே.சி. சுபாஷினி, வட்டார கல்வி அலுவலர்கள் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

