நாகப்பட்டினம் மாவட்டம் தோணித்துறை சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாகப்பட்டினம் ஜூன் 22
இந்த ஆய்வின் போது மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தொரிவித்ததாவது :
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் இயங்கக்கூடிய இந்த தமிழ்நாடு உணவகமானது ஆனது 20 அறைகளுடன் கட்டப்பட்டு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கட்டிடமானது வருடங்கள் சென்ற காரணத்தினால் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை புதுப்பிக்க சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தினால் இந்த கட்டடமானது இடிக்கப்பட்டு புதிய கட்டிடமாக கட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சுற்றுலாத்துறை கட்டுபாட்டிலுள்ள தமிழ்நாடு உணவகங்கள் போன்ற 300 மேற்பட்ட இடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதை கண்டறியப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும், அதனை புதுப்பிக்கவும், மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடமாக கட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கொடிமரம் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நாகப்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் க.செந்தில்குமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

