நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூன் 20
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்ரீ லெட்சுமி ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையில் பாரம்பரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது. நாகப்பட்டினம் மாவட்டம் பாரம்பரிமான நெற்களஞ்சியமாக விளங்குவதால் இம்மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்தனர் வேளாண்மை துறையின் மூலம் குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 320 விதைகளுக்கும் ரூபாய் 180 மண்ணில் இடும் நுண்ணுயிரிக்கும் ரூ.120 உயிர் உரங்களுக்கும் ரூ.500 விதைப்பு மற்றும் அறுவடை ஊக்கத்தொகைக்கும் ஆகக்கூடுதல் ரூ.1120 வழங்கப்பட்டது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் 15 ஏக்கர் பரப்பில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
2023-2024 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால் சிறுதானியங்கள் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண்மை துறை மூலம் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு 2023-2024-ல் குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1150 வீதம் 7 ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கர் மட்டுமே வழங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரம் சின்னதும்பூர் பஞ்சாயத்தில் உள்ள கிராமத்துமேடு கிராமத்தில் முத்துகுமார் த/பெ.தனபால் என்பவர் கேழ்வரகு 0.5 ஏக்கரிலும் கம்பு 0.5 ஏக்கரிலும் பாரம்பரிய நெல் இரகமான அறுபதாம் குறுவை 1 ஏக்கரிலும் காய்கறி மற்றும் பழபயிர்கள் போன்வற்றை இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து சாகுபடி செய்து வருகிறார். இதில் கேழ்வரகு பயிர் தற்பொழுது அறுவடை நிலையில் உள்ளது. இக்கிராம பஞ்சாயத்து 2023-2024 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்து என்பதாலும் சிறுதானிய ஆண்டு என்பதாலும் மற்ற விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து வேளாண்மை உழவர்நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பண்ணைக் கருவிகளையும் 2 பயனாளிகளுக்கு தார்பாலின்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வே.தேவேந்திரன் வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கீழையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்;(பொ) வை.பாலசுப்பிரமணியன் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

