தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 25 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டது. அதன் மூலம் உலக அளவில் காப்பர் உற்பத்தியில் போட்டி போடும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்தனர். பல ஆயிரக்கணக்கான குடும்பத்திற்;கு வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்து வந்தது.
தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவில் தொழில் இயக்கத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை மிகவும் உதவி கரமாக இருந்து வந்தது. ஆலை நிர்வாகம் சுற்றுவட்டார மக்களுக்கு பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட ஆலை சில அரசியல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது. மீண்டும் ஆலையை திறந்து பழையபடி பொருளாதார மேம்பாடு அடைய செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ஆலை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆலை மூடப்பட்டிருக்கும் நிலையிலும் ஆலை நிர்வாகம் அதன் சமூகப்பணிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, சில அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசால் மூடப்பட்டது. அதனை மீண்டும் திறந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தென் இந்தியாவின் துறைமுக தொழில் நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மீண்டும் அதன் உற்பத்தியை துவக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்கிற உத்திரவாதத்துடன் தூத்துக்குடி மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம், வேலைவாய்ப்பு, பணபுழக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2018ல் நிறுவனம் மூடப்பட்டபிறகும், 2021ல் அதன் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்காக 60 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. நாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் தத்தளிக்கும் நேரத்தில், ஸ்டெர்லைட் தானாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முன்வந்தது, 2,000 டன்களுக்கு மேல் தூய்மையான மருத்துவ தர ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்றி நாட்டிற்கும் மாநிலத்தின் 32 மாவட்டங்களுக்கும் இலவசமாக வழங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தாமிரா வித்யாலயம் திட்டத்தின் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில், இதுவரை 2 கோடியே 21 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் தாமிர சுரபி திட்டத்தின் மூலம் முதலில் 20 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வந்தன. தற்போது இத்திட்டம் கூடுதலாக 13 கிராமங்களை சென்றடைகிறது. இதன் மூலம் இராண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். 91 லட்ச ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் 47 லட்சத்து 74ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பசுமை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் 10 லட்சம் மரக்கன்றுகளை இலக்காக கொண்டு இதுவரை 1.15 லட்சம் மரங்கள் நடப்பட்டு, பிரமாரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இதுவரை 48லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த 400 பேருக்கு திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேதாந்தா அறக்கட்டளையுடன் இணைந்து 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
சாமிநத்தம் கிராமத்தில் 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நாப்கின் உற்பத்தி அலகு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் நாப்கின் கொள்முதல் திட்டத்தில் 12 பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் 350 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். பல கிராமங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தற்போது வரை 15 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 20ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களை சேர்ந்த 16 மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 26லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 4 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. நேரடி வேலை வாய்ப்புகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை தூத்துக்குடி கடற்கரை கிராமங்களை சேர்ந்த 115 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கிராஜா தேவர் தெரிவிக்கையில்: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு மருத்துவமனை மற்றும் நவீன பள்ளிகள் உட்பட தூத்துக்குடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்ற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய-மாநில அரசுகள் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமிர உருக்கு ஆலையானது மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல பெண்களுக்கு நன்மைகள் செய்து வருகின்றனர். வங்கிகள் மூலம் கடன் உதவிகள் மற்றும் தையல் இயந்திரங்களை பெற்று சுயமாக தொழில் செய்வதற்கு தாமிர உருக்கு ஆலை மூலம் பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கி ஏழை எளிய மாணவர்கள் படிப்புக்கு உதவி செய்தனர் அதுமட்டுமல்லாமல் இந்த தாமிர உருக்கு ஆலையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசானது தாமிர உருக்கு ஆலை எதிர்ப்பாளர்களுக்கு மதிப்பளிப்பது போல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரில் பல்வேறு வளர்ச்சிகள் நடைபெற்றது. ஆகையால் உடனே எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் செவிசாய்த்து இந்த ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்து மத்திய- மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு முயற்சி செய்தால் 1996ம் ஆண்டு நடந்த போராட்டத்தை விட இரண்டு மடங்கு போராட்டத்தை நடத்துவோம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ஸ்டெர்லைட்டை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத நபர் துரை வைகோ. தன்னுடைய சிகரெட் கம்பெனிகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் கேன்சரை கொடுத்துக் கொண்டு இருப்பவர். மக்கள் நலனை பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு வழியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கிறோம், என்று இசக்கிராஜா தேவர் தெரிவித்தார்.
ஆலை எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல சோதனைகளை சந்தித்தாலும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக எந்த சமரசமும் செய்யாமல் சாதனை படைத்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் ஆலை நன்மதிப்பை பெற்று திகழ்கிறது.
கடுகளவு எதிர்ப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும், தற்போது ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வரும் மக்கள் நல பணிகளால் மலையளவு ஆதரவு பெருகி வருவதால், ஸ்டெர்லைட் ஆலை திறக்க போவது எந்நாளோ? அந்நாளே தூத்துக்குடி மக்கள் வாழ்நாளில் பொன்னாள் என தங்கள் நம்பிக்கையை தளர விடாமல் இருந்து வருகின்றனர் தூத்துக்குடி பொதுமக்கள்.

