தூத்துக்குடி, ஜூன்,16
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி தேவையற்ற கழிவு பொருட்களாக பல்வேறு பொருட்களை தூய்மை காவலர்களிடம் வழங்குகிறார்கள். அதை நாம் தரம்பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு பிரிவுகளாக கையாளப்பட்டு மக்கும் குப்பைகளான காய்கறிகள் கழிவுகள் மலர்கள் மற்றும் சிலவற்றை இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அதை சூழற்சி முறையில் இயற்கை உரம் தயாரித்து பல்வேறு வகையான வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அத்திட்டத்தை முறையாக அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைக்கிணங்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகள் தரம் பிரித்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு வட்டார வளர்ச்சி உதவிஅலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு பேசுகையில் இதுபோன்ற பணிகளை முறையாக மேற்கொண்டு பல்வேறு இயற்கை வளங்களை பேணிபாதுகாக்க இந்த உரத்தை பயன்படுத்துவதின் மூலம் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் இப்பணியை முழுமையாக மேற்கொள்ளும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள அதிகாரிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தூய்மை காவலர்கள் என அனைவரும் தமிழக அரசின் திட்டங்களுக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களின் வளர்ச்சிக்கு துணையாக நிற்க வேண்டும். அனைவருடைய பணியையும் மனதார பாராட்டுகிறேன். என்று தெரிவித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி, மகளிர் அணி ஆரோக்கியமேரி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் குணாபாஸ்கர், கௌதம், அரசு சார்ந்த சிவசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

