நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூன் 16
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி சி.கார்த்திகா உடன் உள்ளார்.
இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழந்தை உளவியல் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சியானது பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், காவல் துறை அலுவலர்கள் போன்ற அலுவலர்களுக்கு நடைபெறவுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான திறன் வளர்ப்பு பயிற்சி மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகளே நமது எதிர்காலம் என்பதால் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக மிக அவசியமாகிறது.

எனவே குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது பள்ளி என்பதனால் இந்த பயிற்சியில் பங்கு பெற்று பங்கேற்ற குழந்தைகளின் நலனை பாதுகாக்க வந்திருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதனைப் பற்றி செய்தி மற்றும் தகவல் அவசியமாகிறது. எனவே குழந்தைகளின் நலனை தலைமை ஆசிரியர்கள் பாதுகாக்கும் படியும், இந்த பயிற்சியில் கிடைக்கப்பெற்றவற்றை மற்ற ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை உணர்வுபூர்வமாகவும் கையாளும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை அனைத்துதுறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வ.எழிலரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், அனைத்து துறை அரசு அலுவலர்கள்; மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

