தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மகளிர் காவலர்கள் பாய்மரப்படகில் காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து கோடியக்கரை சென்று வருகின்ற நிகழ்ச்சியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூன் 14

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கொண்டாடும் விதமாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக 10.06.2023 தேதி முதல் 17.06.2023 வரை பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 25 நபர்கள் பாய்மரப்படகு மூலம் சென்னை முதல் கோடியக்கரை வரை சென்று மீண்டும் கோடியக்கரை முதல் சென்னை வரை 1000 கி.மீ பயணம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாய்மரப்படகு குழு 13.06.2023-ம் தேதி மாலை காரைக்கால் மார்க் துறைமுகம் வந்தடைந்து. பின்பு இன்று 14.06.20023-ம் தேதி காலை காரைக்கால் துறைமுகத்திலிருந்து கோடியக்கரை சென்று மீண்டும் இன்று மாலை காரைக்கால் துறைமுகம் வந்து மறுநாள் 15.06.2023 தேதி காலை காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி செல்ல உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா காரைக்கால் இந்திய கடலோர காவல் படை கமாண்டன்ட் விஜய் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.