தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கணேசபுரத்தைச் சேர்ந்த பெங்களூர் விமான நிலையம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் – கௌசல்யா தம்பதியரின் மகன் லெட்சுமணன் என்ற விவேக், பண்டாரம்பட்டி நடராஜன் – வீரலெட்சுமி தம்பதியரின் மகள் தமிழ்செல்வி ஆகியோரது திருமணம் கடந்த 8ம் தேதி மேல அலகாபுரி முத்தாரம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் இல்லத்திற்கு நேரில் வந்து மணமக்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.
இதில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, கௌதம் ஆகியோர் உடன் இருந்தனர்.

