தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன் – சாந்தா ஆகியோரது இல்ல புதுமனை புகுவிழா கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் ஆசீர்வதித்து வாழ்த்தினார்கள்.
இவர்களுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, கௌதம் ஆகியோர் உடன் இருந்தனர்.

