தூத்துக்குடி
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியை தேர்வு செய்து அண்ணா பேருந்துநிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு புதிய பேருந்துநிலையம் சாலை வசதி, சிமென்ட் சாலை வசதி, கால்வாய் வசதி, உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆமை வேகத்தில் நடைபெற்ற பணிகளை முழுமையாக துரிதப்படுத்தி செய்யும் வகையில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கட்டுமான பணிகளை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கிடையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் மத்திய மாநில அரசின் கூட்டுநிதியில் நடைபெறும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று சூழற்சி முறையில் முழுமையாக பணியை முடிப்பதற்கு அறிவுரை வழங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய அண்ணா பேருந்துநிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் திணேஷ்குமார் ஆகியோர் ஒப்பந்ததாரர்களுடன் முழுமையாக தரைத்தளம் முதல் மாடி வரை அனைத்து பகுதிகளிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கவுன்சிலர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். ஏற்கனவே மாநகரில் இருந்த சிதம்பரநகர் மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கட்டுமானப்பணிகள் அதே போல் இரண்டாம் கேட் பகுதியில் வணிக வளாகம் ஆகிய இரு பணிகளும் முழுமையாக நடைபெற்று கொண்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உலக புகழ் பெற்ற பனிமயமாதா திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த வருடம் தங்கதேர் வீதியுலா வருவதையொட்டி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாலும் அன்றைய தினம் முழுமையாக முடிவு பெற்று பேருந்து நிலையம் மார்க்கெட் வணிக வளாகம் உள்ளிட்ட பணி முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

