தூத்துக்குடி, ஜூன்,12
தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர்
என்.ஆர். தனபாலன் உத்தரவின்
பெயரில்
தூத்துக்குடி மாவட்ட
தமிழ்நாடு நாடார் பேரவை
மாவட்டத் தலைவர் டி.
ரவிசேகர், மாவட்ட செயலாளர்
எஸ்.பி மாரியப்பன், மாவட்ட பொருளாளர், மில்லை எஸ். தேவராஜ்
தலைமையில்
இன்று காரனேசன் திரையரங்கம் அருகே மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை
கொண்டாடும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்சல் நேசமணியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தூத்துக்குடியில்
தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி நிர்வாகிகள் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் இருதயகுமார், நாட்டாமை அன்புராஜ்,
செந்தில் மற்றும் நிர்வாகிகள்
சதீஷ்குமார்,
சரவணன், சண்முகவேல், பட்டு ராஜ், கதிர், அந்தோனிராஜ், ராஜவேல், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

