தூத்துக்குடி
தமிழ்நாடு அரசும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டும். வீட்டுக்கு ஓரு மரக்கன்று நடவேண்டும். அதை பேணிபாதுகாக்க வேண்டும். நெகிழி கழிவுகள்; இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாநகரில் இத்திட்டத்தை முழுமையாக கடைப்பிடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட போல்பேட்டை தூயமிகாவேல் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிறைவில் சபையின் மூப்பர்கள் இணைந்து சுற்றுச்சூழல் ஞாயிறு ஆராதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் மஞ்சள் துணிப்பை ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சேகரத் தலைவர் லிவிங்ஸ்டன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் சுதன்கீலர், சமூக ஆர்வலர் ஐசக், மற்றும் சபையை சேர்ந்த பாதிரியார்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

