தூத்துக்குடி.
இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சட்டதிட்ட விதிமுறைகளை உருவாக்கப்பட்ட முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பிற்கிணங்க திமுகவின் 15-வது கட்சி தேர்தல் முறையாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, மற்ற பொறுப்புக்கும் நிர்வாகிகள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக கட்சியின் கட்டமைப்பான மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேருராட்சி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெற்று கட்சியின் 23 அணியை சார்ந்த நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் முறையாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி தலைவராக பழனி, துணைத்தலைவராக சென்றாயப் பெருமாள், அமைப்பாளராக அன்பழகன், துணை அமைப்பாளர்களாக ஆபிரகாம் மனுவேல், குமார், வர்ஷினி, மாரிராஜ், செய்யது ஜபார் ஆகியோர் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் ரவி, கருணா, மணி உள்பட பலர் உடனிருந்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைவரும் தலைமைக் கழகத்திற்கு விசுவாசத்துடன் கட்சியை வளர்ப்பதற்கும், கொள்கைளை மக்களுக்கு எடுத்துரைத்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.

