• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கு : கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் தாளமுத்துநகர் பிரதான சாலை முழுமையாக போடாமல் குண்டும் குழியுமாக காணப்படும் அவலம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
June 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கு : கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் தாளமுத்துநகர் பிரதான சாலை முழுமையாக  போடாமல் குண்டும் குழியுமாக காணப்படும் அவலம்,  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜூன்,9

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான தாளமுத்துநகர் பிரதான சாலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து தரக் கோரி மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினாருக்கு அனுப்பிய நினைவூட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்து நகர் மெயின் சாலையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் பணிகள் நடைபெறாமலும், மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையிலும் உள்ளதால் அதனை ஆய்வு செய்து சீரமைக்குமாறு இருமுறை கடிதங்கள் நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடி கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பணிகளை விரைந்து செய்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அவர்களிடமிருந்து 5.5.2023 நாளிட்ட கடிதம் மூலம் தகவல் பெறப்பட்டது. ஆனால் கடிதம் பெறப்பட்டு 30 தினங்களுக்கு மேல் ஆகியும் ஒப்பந்ததாரர் நாளது தேதி வரையிலும் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இப்பணிக்கான ஒப்பந்தக்காரர் யார் என்பதை தெரிவிக்காமல் அறிவுறுத்தல் கடிதம் மூலம் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மேற்படி பணிகளை 15 தினங்களுக்குள் தொடங்காவிடில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர்களுக்கு, தங்களது நிர்வாக பணி குறித்த அலட்சியப் போக்கினை சுட்டிக்காட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் 15 வார்டு உறுப்பினர்கள் சார்பாகவும், மாப்பிள்ளையூரணி பொதுமக்கள் சார்பாகவும் நேரடியாக புகார் அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகர் மெயின் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப் போக்கினால் கிடப்பில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை பணியினை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தனது நினைவூட்டல் மனுவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழிற் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In