நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஜூன் 8
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருக்கை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கொடியாளத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள காலனி குளத்தில் ரூ.5.85 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள், பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ரூ.0.42 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள், இருக்கை ஊராட்சியில் ரூ.5.91 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிப்பறை கட்டடம் கட்டும் பணிகள், இருக்கை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.0.985 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், எரவாஞ்சேரி ஊராட்சியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, 15 ஆவது மானிய நிதியின் கீழ் எரவாஞ்சேரி ஊராட்சி காருதாகுடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.0.95 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இருக்கை ஊராட்சியில் ரூ.5.80 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழலக கட்டடம், தேவூர் ஊராட்சியில் ரூ.9.47 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், தேவூர் ஊராட்சியில் கீழ்வேளுர் கச்சனம் சாலையில் கடுவையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.325 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், எரவாஞ்சேரி ஊராட்சி காருதாகுடி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தேவூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருந்தகத்தில் மருந்து, மாத்திரை இருப்பு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.சேகர், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜகோபால், இராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

