தூத்துக்குடி
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீபேச்சி அம்பாள் திருக்கோயில் கொடை விழா நடைபெறுகிறது. இதற்காக கடந்த 6-ஆம் தேதி செவ்வாய்கிழமை கால்நட்டும் பூஜை விழாவுடன் துவங்கியது.
பசும்பொன்நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீபேச்சி அம்பாள், ஸ்ரீசெல்வசக்தி விநாயகர், ஸ்ரீ சந்தனமாரி அம்பாள், ஸ்ரீ பிரம்மசக்தி அம்பாள், ஸ்ரீ கருப்பசுவாமி, ஸ்ரீ வைரவ சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு கொடை உற்வச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை 9-ஆம் தேதி துவங்கி புதன் கிழமை 14-ஆம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
9-ஆம் தேதி ‘நெஞ்சுக்கு நிறைவான மகிழ்ச்சியை தருவது,சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றமும், 10-ஆம் தேதி திரைப்பட பாடல் இன்னிசைக் கச்சேரியும், 11-ஆம் தேதி கலைநிகழ்ச்சியும், 12-ஆம் தேதி நையாண்டி மேளத்துடன் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் தீர்த்தக்கரை சென்று வருதல், அன்று இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆலயத்திற்கு கொண்டு வருதல், இரவு 8 மணிக்கு சந்தனகாப்பு அலங்கார பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11.30 மணிக்கு நடுநிசி கொடை நடைபெற இருக்கின்றன.
14-ஆம் தேதி புதன்கிழமை காலை 5 மணிக்கு பொங்கலிடுதல், காலை 8 மணிக்கு அம்மன்களும், சுவாமிகளும் மஞ்சள் நீராடுதல், பக்தகோடிகள் அனைவரும் முளைப்பாரி எடுத்து நையாண்டி மேளத்துடன் முளைப்பாரி அலசுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
கோவில் கொடை விழாவினை முன்னிட்டு அலங்கார தோரணங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு கோவில் முழுக்க ஜொலிக்கின்றன.
கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் செய்து வருகின்றனர்.

