தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சியில் அடங்கியுள்ளது. அதற்கேற்றாற் போல் ஒவ்வொருவரும் பொதுமக்கள் நலன் கருதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சியில் மேம்பாடு அடைவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றிய குழு நிதியிலிருந்தும் ஓதுக்கீடு செய்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார்.
அதை செயல்படுத்தும் வகையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திம்மராஜபுரம் ஊராட்சியில் 2020 2021ம் ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 18,55,000 லட்சம் மதிப்பீல் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான தொடக்க விழா பூமிபூஜை நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்து பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
விழாவில் திம்மராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைசெல்வன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், வக்கீல் நாராயணன், திம்மராஜாபுரம் ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

