நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் பெரும் அளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் ஜூன் 5
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் பெரும் அளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்ச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் தூய்மை பணி நடைபெறுகிறது.
மேலும் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் “என் குப்பை என் பொறுப்பு’’ என் நகரம் என் பெருமை என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் நகர் மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையர் பொறுப்பு களப்பணி உதவியாளர் துப்புரவு பணி மேற்பார்வையாளர் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் டெங்கு களப்பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் சுற்றுசூழலை பாதுகாப்பது குறித்த கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு. பொதுமக்களுக்கு சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளையும் மரக்கன்றுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி தலா ரூ.ஒரு இலட்சம் காசோலையும் வழங்கப்படுவதை தொடர்ந்து இந்த ஆண்டு நம் மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை குறைத்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழலை பாதுகாத்தமைக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வெ.தமிழ்ஒளி நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து நாகப்பட்டினம் நகரமன்ற துணைதலைவர் செந்தில்குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்துகொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

