தூத்துக்குடி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சி படகுகுழாம் அருகில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்று நட்டி அதன் பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சப்கலெக்டர் கௌரவ்குமார், பயிற்சி கலெக்டர் வளர்ச்சி தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், அரசு வக்கீல் மாலாதேவி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், செல்வகுமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், விளாத்திகுளம் வனசரகர் கவின், திருச்செந்தூர் கனிமொழி அரசு மற்றும் கருணா, மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

