தூத்துக்குடி
திமுக ஆட்சியின் இராண்டில் ஈடு இணையற்ற சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்த வேண்டும் என்று மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மட்டக்கடையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு திரேஸ்புரம் பகுதி செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவருமான நிர்மல்ராஜ் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியாளரின் திராவிட மாடல் ஆட்சியில் சமூகநீதி சமத்துவம் தமிழ்மொழி வளர்ச்சி தமிழ்நாடு வளர்ச்சி ஜாதி மதம் இல்லாத நிலை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற என்னத்தோடு சாதனைகள் தொடர்கின்றன. தொழில்துறையில் 85 சதவீதம் தற்போது வளர்ச்சியடைந்துள்ளது. இதையெல்லாம் புரியாமல் நேற்று பெய்தமழையில் இன்று முளைத்த சில காளான்கள் எல்லாம் குட்டையை கிளப்பி மீன்பிடிக்க நினைக்கிறார்கள். இது பெரியார் அண்ணா கலைஞர் வழியில் தளபதியார் வழிநடத்தும் தமிழ்நாட்டு மண்ணில் நிறைவேறாது. கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு 33சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்த அடிப்படையில் தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதன் மூலம் பல்வேறு பதவிகளில் அமர்ந்துள்ளேன். கல்வியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் அரசுப்பணியில் 30சதவீதம் வேலைவாய்ப்பு என்று இருந்தது தற்போது 50சதவீதத்தையும் கடந்து பெண்கள் பணி செய்யும் நிலை வந்துள்ளது. கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடைபெற்றதுண்டு இந்த நிலையெல்லாம் மாற்றியது திமுக தான் திருச்செந்தூர் கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு தான் பலர் செல்ல வேண்டும். இன்று சுதந்திரமாக எவ்வித ஜாதி வேறுபாடுகள் இன்றி அனைவரும் சமமாக சாமிதரிசனம் செய்கிறோம் என்றால் அதற்கு திமுக ஆட்சிதான் காரணம். 96ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தான் கனிணி கல்விமுறையை அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் பல அறிவுத்திறன் பலருக்கும் கிடைக்கப்பெற்றது. சமஸ்கிருதம் படித்திருந்தால் மருத்துவராக முடியாது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து என் மகன் உள்பட பலர் மருத்துவராக வரக்காரணமாக இருந்தது திமுக ஆட்சிதான். இதுபோன்ற பல வரலாறுகளை மறக்கக்கூடாது. இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் உள்ளவைகளை எடுத்துக்கூறுகிறோம் நமது மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க் டைட்டல்பார்க் என பலகோடி மதிப்பீல் நான்கு தொழில்நிறுவனங்கள் அமையவுள்ளன. அதன்மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் இதைபோன்ற தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் நம்முடைய முதல்வர் ஜப்பான் சிங்கப்பூர் சென்று தொழில்முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் பொருட்டாக 3233 கோடியில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒராண்டில் உற்பத்தியை தொடங்கும் போது வேலைவாய்;ப்புகள் கிடைக்கும் திராவிடமாடல் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். கலைஞர் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததைபோல் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் உயர்கல்விக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஜீலை 15முதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. காரணம் அதிக அளவில் குழந்தைகள் பள்ளிக்கு வருகை மற்றும் அவர்களை சத்தாண உணவுகள் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கி கல்வி அறிவு பெற்றவர்களாக வரசெய்;ய வேண்டும் என்ற நோக்கம் தான் சில தினங்களுக்கு முன்பு 1லட்சம் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடங்கினார்கள். அதை முறையாக செயல்படுத்தவில்லை. அத்திட்டத்திற்கான நிதியையும் மாநில அரசு பங்களிப்;பு வழங்கி தற்போது முழுமை பெறும் நிலையில் திமுக முன்னெடுத்து சென்றுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் பணி முறையாக நடைபெறுகிறது. கடைக்கோடி பின்தங்கிய பகுதியாக இருக்கிறது என்று முதல்வரிடம் பேசி பல சிறப்பு நிதிகள் பெறப்பட்டு புதிதாக தார்சாலை மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் சீராக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படுகிறது. பசுமையை உருவாக்கும் வகையில் 33 சதவீதம் மரம் இருக்க வேண்டும் என்ற நிலையை எட்டுவதற்கு அத்திட்டமும் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெறுகின்றன. என்பதை தடுக்கும் வகையில் தமிழ்படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு முன்னுரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்து வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 முதல் பெண்களுக்கான ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவர் மற்றும் தாய் தந்தையர்களை எதிர்பாராமல் இலவச பயணம் மேற்கொள்ள அரசு இலவச பயண திட்டம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வியாபாரம் செய்ய முடியாதநிலை இருந்தது திமுக ஆட்சி வந்தபிறகு இரவு 12 மணி வரை வியாபாரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திமுக பொறுப்பேற்றதும் 35 ஆயிரம் வரை இருந்த கொரோனா முதல்வரின் சிறப்பான பணியின் மூலம் படிப்படியாக குறைக்கப்பட்டு தடுப்பூசிகளை வழங்கி இன்று அனைவரும் எல்லா நிகழ்ச்சிகளையும் குறிப்பாக கோவில் திருவிழாக்கள் நல்லமுறையில் நடைபெறுகின்றன. உலகத்திற்கே மருத்துவ துறையில் சென்னை சிறந்து விளங்குவது போல் விளையாட்டு துறையையும் சிறந்து விளங்க வேண்டும் என்று அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இதுபோன்று திமுக ஆட்சியில் பல சாதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை பொறுத்துகொள்ள முடியாத எதிர்கட்சியினர் நான் கூட ஒரு கருத்தை ஒருவரிடம் கூறியதை போல் தவறாக சித்தரித்துள்ளனர். இதுபோன்ற பதிவுகளுக்கெல்லாம் நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். கடந்த முறை இருந்த அதிமுக எம்.பி யாரென்றே யாருக்கும் தெரியாது இன்று கனிமொழி எம்.பி நம் தொகுதிக்கு செய்த சாதனைகள ஏராளம் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் தீர்வு காண்கிறார். பாரளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் பேசாமல் இருக்கிறவர்கள் மத்தியில் வாய்ப்புகள் கேட்டு பேசி பல திட்டங்களை கொண்டுவந்து நமக்காக உழைத்து வருகிறார். மீண்டும் அவர்தான் வேட்பாளர் தளபதி முடிவெடுப்பார். அனைவரும் ஒன்றுபட்டு 2024 தேர்தலில் வென்று காட்ட வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், முத்துராமன், அருண்சுந்தர், சங்கரநாராயணன், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் மணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், கவுன்சிலர்கள் மெட்டில்டா, சுதா, மரியகீதா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, ராஜா, முனியசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் அண்டோ, ரவிசந்திரன், கருப்பசாமி, டென்சிங், பொன்ராஜ், பொன்னுச்சாமி, சதிஷ்குமார், மற்றும் உலகநாதன், பாஸ்கர், மகளிர் அணி சத்யா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

