தூத்துக்குடி
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் 100வது பிறந்தாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு 10கிலோ அரிசி பை, மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மாற்றத்திறனாளிகள் பலர் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அதைப்பெற்றுக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தங்களுடைய குறைகளையும் குடும்பநலன்களையும் கேட்டறிந்தார். அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்ற உத்தரவாதத்தை அவர்களிடம் அமைச்சர் கூறினார்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

