தூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கணேஷ் மேற்கொண்ட முயற்சியின் கீழ் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி ரோச் காலனியை சார்ந்த ரீகாந்த் மனைவி ஆஷா மேலசண்முகபுரத்தை சார்ந்த தோழி சுமதியுடன் பிப்ரவரி 01ம் தேதி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக ரோச் காலனிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரு சக்கர வாகணம் கண் இமைக்கும் நேரத்தில் ஆஷா அருகே வந்தது. வந்த மறு நிமிடமே ஆஷா கழுத்தில் இருந்த 17 பவுன் தங்க சங்கிலியை அத்துவிட்டு இருவரையும் கீழே தள்ளிவிட்டுட்டு வந்த வாகணத்திலையே தப்பிச் சென்றார். விபரம் தெரிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆஷாவையும் அவரது தோழியையும் போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்
அதன்படி தென்பாகம் காவல்நிலையத்தில் 17 பவுன் தங்க தாலி செயின் மர்மநபநால் திருட்டு போனதை புகாராக தெரிவித்து கொண்டார். கொடுக்கப்பட்ட புகாரின் கீழ் மர்மநபரை தேடும் பணியை போலீசார் தீவிர படுத்திக் கொண்டனர். மர்ம நபர் பற்றிய விபரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்காத பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கணேஷ் மேற்கொண்ட அதிரடி முயற்சியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் ஓர் தனிப்படை அமைத்துக் கொண்டனர்.

இந்த தனிப்படையில் தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார் , வேல்ராஜ் மற்றும் காவலர்கள் செந்தில்ராஜ் , திருமணிராஜன் , முத்துப்பாண்டி , ஆறுமுகம் , பென்சிங் , சாமுவேல் இடம்பெற்று இருந்தனர். இவர்களது கூட்டு முயற்சியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வந்தனர். இவர்களது தேடலில் கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீவைகுண்டம் குலசேகரநத்தம் கிழக்கு தெருவை சார்ந்த சுடலைமணி மகன் நயினார் (வயது.21)தான் அந்த மர்மநபர் என்பது தெரியவந்தது. இவர் இதில் தற்போது சுமார் 2 ஆண்டு காலமாக முத்தையாபுரம் ராமசாமி நகர் 5வது தெருவில் வசித்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நயினாரை நாலபுரமும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் (07-03-2021) கால்டுவெல் காலனி பகுதியில் தேடப்பட்டு வந்த நயினார் இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்த தனிப்படையினர் அவரை பின் தொடர்ந்து வந்து திருச்செந்தூர் ரோடு அருகே அன்னம்மாள் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே மடக்கி பிடித்தனர். மேலும்
நயினாரிடம் மேற்கொண்ட விசாரணையில் , அவர் கொடுத்த ரகசிய தகவலின் படி 17 பவுன் தங்க தாலி செயினும் , திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் ( TN.92E 8916) கைப்பற்றபட்டது. அதன் பின் தூத்துக்குடி கனம் குற்றவியில் நீதித்துரை நடுவர் எண் 01ல் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவின் படி கோவில்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திறம்பட செயல்பட்டு தலைமறைவாகி இருந்த நயினாரை கைது செய்த தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் , உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார் , வேல்ராஜ் மற்றும் காவலர்கள் செந்தில்ராஜ் , திருமணிராஜன் , முத்துப்பாண்டி , ஆறுமுகம் , பென்சிங் , சாமுவேல் போன்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாழ்த்தினார்.
செய்தி தொகுப்பு: போலீஸ் செய்தி வெப் நியூஸ் சேனல்
சிறப்புச் செய்தியாளர் எம் ஆத்தி முத்து

