நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூன் 01
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்.இந்த பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கொரோனா ஊரடங்கு கால கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவ குழந்தைகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆடல் பாடல் விளையாட்டுகள் செயல்பாடுகள் மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். அதன்மூலம் குழந்தைகளின் திறமைகள் பலவற்றை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கின்றனர். அரசால் வழங்கப்பட்ட கற்றல் கற்பித்தல் உபகரணங்களை உள்ள தமிழ் எழுத்துக்கள் குறியீடு எழுத்துக்களை கற்பிக்க பயனுள்ளதாக உள்ளது. பாட அட்டைகள் கதைகளையும் நிகழ்வுகளையும் விளக்க பயனுள்ளதாக உள்ளது.

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வடிவியல் வடிவங்கள், மணிகள், எண் அட்டைகள், கணித கட்டளை எளிமையாக்குகிறது. என்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகைலும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் மகிழ்வுடன் கற்றல் இடைவெளியை சரி செய்யவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி பிரைம் கல்லூரியில் இன்று முதல் 03.06.2023 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், பொரவச்சேரி ஊராட்சியில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவகுமார், மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வியியல் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ்,நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

