தூத்துக்குடி திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 20வது வார்டில் திமுக வேட்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு ஜெகன் பெரியசாமி போட்டியிட்டார். தேர்தல் நேரத்தில் வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பின் போது திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமின்றி மாநகராட்சி நிர்வாகம் திமுக வசம் வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை துண்டு பிரசுரம் மூலம் வீடுதோறும் வாக்களர்களிடம் எடுத்து கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெறாத திட்டங்களை எல்லாம் நான் வெற்றி பெற்ற பின் செய்து கொடுப்பேன், என்ற உறுதிமொழியோடு வெற்றி பெற்ற ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின் 60 வார்டு பகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் தேவை என்ன என்பதை குறிப்பெடுத்துக்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து எந்த பணியை எந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் செய்ய வேண்டும். என்பதை தீர்மானமாக மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அனைத்து பகுதிகளுக்கு பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிலும் குறிப்பாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக கால்வாய் கட்டும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. தார்சாலை பார்க்காத பகுதிகளுக்குகெல்லாம் மாநகராட்சி நிதி மாநில அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் ஜெகன் பெரியசாமியை தேர்ந்தெடுத்த 20வது வார்டு பகுதியான போல்பேட்டை நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் கிழக்கு மேற்கு குறுக்கு தெரு என அனைத்து பகுதிகள் மக்களுக்கும் தேவையான அடிப்படை பணிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு முழுமையாக பார்வையிட்டார்.
ஆய்வின் போது திமுக வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.

