• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
May 31, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இருபது ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டது. அதன் மூலம் உலக அளவில் காப்பர் உற்பத்தியில் போட்டி போடும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவில் தொழில் இயக்கத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை மிகவும் உதவி கரமாக இருந்து வந்தது. ஆலை நிர்வாகம் சுற்றுவட்டார மக்களுக்கு பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட ஆலை சில அரசியல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது. மீண்டும் ஆலையை திறந்து பழையபடி பொருளாதார மேம்பாடு அடைய செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ஆலை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆலை மூடப்பட்டிருக்கும் நிலையிலும் ஆலை நிர்வாகம் அதன் சமூகப்பணிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அந்த வகையில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல் என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை வகித்தார். இவர் புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசும்போது, ‘’ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாள் முதல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன்மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பசுமை தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் 10 லட்சம் மரங்கள் நடவு செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும். தற்போது தொடங்கியுள்ள இந்த முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்தினை பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்ப மயமாதலை தடுக்கும் டை -மெத்தில் – சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும். அடுத்த கட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் ஆகியவற்றின் மூலம், தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தப்படும். தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35சதவீத காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சலிலோ, 91 8870477985 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Previous Post

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். 

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In