தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது. மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி தெரிவிக்கையில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சனைகளை அதிகாரிகள் தங்களின் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும். மக்கள் பிரதிநிதிகளும் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். குடிநீர், சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வுகாண வேண்டும். அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் முயற்சியால் நமது மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலைபணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி – குலசேகரப்பட்டிணம் – பெரியதாழை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் சாலையில் பழுதுகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தரவேண்டும். கடம்பாகுளம் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் ஆட்சியில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளை மாவட்ட மருத்துவமனையாக உயர்த்தினார்கள். தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதிஒதுக்கீடு செய்யவேண்டும். வருங்காலங்களிலும்; பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பெற்றுத் தருவார்கள் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவிஆட்சியர் கௌரவ்குமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பாசங்கர், கோமதி, பாலசிங், ரமேஷ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், வக்கீல் கிருபாகரன் கபடிகந்தன், பேச்சிமுத்து, ஜோஸ்பர், பிரபாகர், லிங்கராஜா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

