தூத்துக்குடி:
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 32வது நினைவு தினத்தை முன்னிட்டு. மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு தபசு மண்டபம் அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி திரு உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மலர்கள் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மண்டல தலைவர்கள் சேகர் ஐசன் சில்வா செந்தூர்பாண்டி விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன் விஜயராஜ் அருணாசலம் தனுஷ் ரஞ்சிதம் ஜெபராஜ் சண்முகசுந்தரம் மைக்கில் பிரபாகர் மகாலிங்கம் சீனிவாச ஆசாரி மெர்லின் மகேந்திரன் ராஜரத்தினம் ஜெயராஜ் சுடலைமுத்து நாராயணசாமி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் ராஜீவ் காந்தி நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

