தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை மேல பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் உத்திரபாண்டி (33). இவர் கடந்த 5ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் செயின் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகிறார்.

