நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், வழங்கினார்.
நாகப்பட்டினம் மே 16
நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப் பிரிவால் கடந்த 01.05.2023 முதல் 15.05.2023 முடிய 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து மற்றும் வளைகோல்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 132 மாணவர்கள் மற்றும் 69 மாணவியர்கள் என மொத்தம் 201 பேர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து மற்றும் வளைகோல்பந்து ஆகிய பயிற்சியில் பயிற்சி பெற்றதுடன் விட்டுவிடாமல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். மாணவ, மாணவியர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டிற்கு நேரம் ஒதுக்கி ஆர்வம் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.மு.குமரன் பயிற்றுநர்கள் தூய மைக்கேல் அகாடமி தாளாளர் ஆல்பிரட் ஜான், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

