நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்
நடைபெற்றது.
நாகப்பட்டினம் மே 15
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 243 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டம் நாகூர் வடகுடி கிராமத்தை சேர்ந்த அனிதா க/பெ அருள்ராஜ் என்பவக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும், திருக்கண்ணபுரம் மேலபகுதியை சேர்ந்த புனிதா க/பெ செந்தமிழ்செல்வன் என்பவக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.7,200 மதிப்பீட்டிலான தையல் இயந்திரத்தினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

