• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டவுள்ளார். திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடரும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

policeseithitv by policeseithitv
May 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக ஆட்சியில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி வட்ட கோவில், 3ம் மைல், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், தலைமை வகித்தனர். வேல்சாமி, முத்துக்குமார், ரேவதி, சக்திவேல், உலகநாதன், மாரியப்பன், லிங்கராஜா, காளியப்பன், பிரபாகர், பேச்சிமுத்து, நாகராஜன், திருமலைகுமார், பாலகிருஷ்ணன், சந்திரா, ஜோதிராஜ், தயாளசுந்தர், ராஜுவ் குமார், கருப்பசாமி பாண்யடின், பூல்பாண்டியன், கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச்செயலாளர்கள் அசோக்குமார், சதிஷ்குமார், சுரேஷ், ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.

வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் கொரோனா பாதிப்பு நிதிநெருக்கடி எல்லாவற்றிலும் கருத்தில் கொண்டு நாட்டுமக்களுக்காக சிந்தித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி அதிகரிக்கச் செய்து அதை சிறப்பாக கையாண்டு இந்தியாவிலேயே எந்த மாநில முதல்வரும் செய்யாத கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கொரோனா நிவாரணமாக ரூ.4000, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இடஓதுக்கிடு மூலம் மருத்துவபடிப்புக்கும், பெண் கல்வி உதவித்தொகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் செயல்படுத்தப்படுகிறது.

நெல் விவசாயம் செய்யும் பணிகள் அதிகரித்துள்ளது. 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. நம்மை இடுப்பில் கட்ட சொன்ன துண்டு தற்போது தோளில் போடும் நிலைக்கு உயர்ந்துள்ளது. கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு மறுக்கப்பட்ட உரிமைக்கு விடுதலை வாங்கி கொடுத்தது திராவிட மாடல் ஆட்சிதான், இதனை பொறுக்க முடியாமல் தான் ஆளுநர் ரவி தினமும் ஏதாவது குட்டையை குளப்பி கொண்டு மீன்பிடிக்க திரிகிறார்கள் அதற்கு நாம் இடமளிக்க கூடாது திமுக அரசின் சாதனைகளை அனைத்து தரப்பினர் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் உள்பட புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவேண்டும். தமிழகத்திலிருந்து முதல்வர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர் என்ற நிலை உருவாக வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கடந்த 10 ஆண்டுகள் மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் திமுக வெற்றி பெற்ற பகுதிகளுக்கு மட்டுமின்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. பாஜக பொய் புகார்களை திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது சுமத்தி வருகிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது அனைத்து தகவல்களும் ஸ்மார்ட் போன் மூலம் வேகமாக பரவி வருகிறது. மகளிர்களுக்கு இலவச பஸ், நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ மாணிவிகளுக்கு வெற்றி பெற திட்டங்கள், காலை சிற்றுண்டி திட்டம், பிறந்த குழந்தை முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால் தான் வட மாநிலங்களிலிருந்து இந்தியர்கள் தமிழகத்திற்கு வேலை செய்ய வருகின்றனர். என்று பேசினார். மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் தாமரை பாரதி, தலைமை பேச்சாளர் ஜஸ்டின் வில்மிரட், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் கஸ்தூரிதங்கம், அந்தோணிகண்ணன், நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், செந்தில்குமார், செல்வகுமார், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர அணி நிர்வாகிகள் ஏசுதாஸ், அருண்குமார், ஜெயக்கனி, பால்ராஜ், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன், கண்ணன், இசக்கிராஜா, சரவணக்குமார், ஜான்சிராணி, ஜாக்குலின் ஜெயா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செந்தில்குமார், சிங்கராஜ், மற்றும் செல்வம், கருணா, பிரபாகர், ஜோஸ்பர், ரவி, மணி, அல்பட், உள்பட பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

Next Post

தூத்துக்குடி பர்மாகாலணி முனீஸ்வரர் கோவில் கொடை விழா முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி பர்மாகாலணி முனீஸ்வரர் கோவில் கொடை விழா முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி பர்மாகாலணி முனீஸ்வரர் கோவில் கொடை விழா முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In