• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

policeseithitv by policeseithitv
May 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி ஒன்றிய குழு துணைத்தலைவரும் ஸ்பிக் நகர் பகுதி செயலாளருமான ஆஸ்கர் தலைமையில் சவேரியார்புரத்தில் நடைபெற்றது. வட்டச்செயலாளர்கள் சுப்பிரமணியன் வசந்தி பால்பாண்டி மைக்கேல்ராஜ் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன் பேசுகையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது இந்த பகுதியில் உங்களோடு பணியாற்றுகிறேன். தனிப்பெரும்பான்மையுடன் திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்று திமுக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பிஜேபிக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டை கடனில் தத்தளிக்க விட்டு செய்தது. அந்த நிதி பற்றாக்குறையையும் ஓரளவு சரிசெய்து முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருகின்றனர். இரண்டு ஆண்டு சாதனையை தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் நடைபெறுகின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கொரோனா காலக்கட்டத்தில் 4 ஆயிரம் உதவித்தொகை பால்விலை குறைப்பு இலவச பேருந்து பயணம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல அறிவிப்பு செய்தார். ஏன் இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் விட்டோம் என்று மக்கள் குறைப்பட்டு கொள்ளும் அளவிற்கு சாதனைகள் செய்துள்ளோம். தலைமை செயலகத்தில் மட்டும் இருந்;து கொண்டு பணியாற்றிய முதல்வர்கள் உண்டு ஆனால் நம் முதல்வர் அந்த பணி மட்டுமின்றி அறிவித்த திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைகின்றதா என்று மாவட்டம் தோறும் ஆய்வுகளையும் மேற்கொள்கிறார். கல்வி உதவித்தொகை, வீடு தேடி மருத்துவம், சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி 89ல் கலைஞர் தொடங்கிய மகளிர் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் 2006 முதல் 2011ல் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மாவட்டம் தோறும் சூழல் நிதி வழங்கினார். 10 ஆண்டுகளாக அதிமுக எந்த உதவியும் செய்யவில்லை. மகளிர் சுய உதவிக்குழு கடன்ரத்து, மறுபடியும் 30 ஆயிரம் கோடி கடன்வழங்க ஓதுக்கீடு ஆப்பிள் ஐ தொழில் நிறுவனம் வாரத்தில் நான்குநாட்கள் விடுமுறை அளித்து மத்த நாட்களில் 12 மணி நேரம் வேலை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைசட்டத்தையும் திமுக தொழிற்சங்கமே எதிர்ப்பு தெரிவித்தது இதுதான் ஜனநாயகம் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. கலைஞர் ஆட்சியில் என்னற்ற சாதனைகளை பெண்களுக்கு வழங்கி 33 சதவீதம் உள்ளாட்சியில் வழங்கினார். முதல்வர் ஆட்சியில் 40சதவீதம் அரசுப்பணி தற்போது வெளிவந்துள்ள 12 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுவும் அரசு பள்ளியில் பயின்றவர்கள். இவர்களது மேல்படிப்பு மருத்துவம் பொறியியல் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இங்கு எம்.பியாக உள்ள கனிமொழி கலைஞரின் மகளாகவும் முதல்வரின் தங்கையாகவும் இருந்து உங்களுக்கு நல்ல பணியை செய்து வருகிறார். இரண்டு அமைச்சர் மேயர் என அனைவரும் நம்கட்சியை சார்ந்தவர்களாக இருப்பதால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி தொழில் உள்பட பல வகையில் வளர்ச்சியடைந்த பகுதி பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கருப்பு பணத்தை மீட்டு நம்முடைய வங்கி கணக்கில் 15 லட்சம் தருவதாக கூறினார்கள் எதுவும் தரவில்லை ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றார்கள் அதுவும் இல்லை. ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில்கள் பாதிப்பு ஜாதிமதம் நாம் பார்ப்பதில்லை. பிஜேபி இந்து நாடு என்று சொல்லி பிரிவினையை ஏற்படுத்துகிறது. குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பெண்கள் மாயம் என்கிறார்கள் கண்டுபிடிப்பு இல்லை. பல மாநிலங்களில் பாலியல் புகார் அதிகம் உள்ளன. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. 2018ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு 100வது நாள் ஊர்வலத்தின் போது காக்கா குருவியை போல் 13 பேரை சுட்டுக்கொண்டார்கள் முதலமைச்சராக இருந்த பழனிச்சாமி டிவியை பார்த்தேன் என்றார். முதலில் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையும் தண்ணீரும் பீச்சிஅடிக்க வேண்டும் கண் எரிச்சலில் கூட்டம் கலையும் அதையும் மீறி சுடவேண்டும் என்றால் அதிகாரிகளின் அனுமதி பெற்று முட்டுக்கு கீழே தான் சுட வேண்டும். ஆனால் மார்பகங்களில் 17முறை சுட்டுள்ளனர். இறந்தவர்கள் குடும்;பத்திற்கு அரசு வேலையும் கூடுதலாக 5 லட்சமும் 96 பேருக்கு 1 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் விதிமுறைகள் நிறைய மீறியுள்ளனர். என்று பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டு வந்ததே திமுக தான் அனைத்து மதத்தினருக்கும் எல்லா நன்மைகளையும் திமுக ஆட்சியில் கிடைக்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என எல்லா வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கோட்டாளம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில பேச்சாளர் கமலா எப்ரேம், முன்னாள் பகுதி செயலாளர் பொன்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணிராஜ், ஆதி ஆனந்த், பாக்கியமணி, ராஜசேகர், ஸ்பிக்நகர் பகுதி நிர்வாகிகள் அந்தோணிகுரூஸ், கல்பனா, வெள்ளப்பாண்டி, மரியகீராஜன், ரகு, அருண்குமார், பிரசாந்த், காளி, ஆனந்த், சித்திரைபுஷ்பம், மாலாசிம்கா, விவேகானந்தன், ஹரிகிருஷ்ணன், உள்பட வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வர்த்தக அணி செல்வக்குமார் நன்றியுரையாற்றினார்.

Previous Post

முத்தையாபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

Next Post

இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டவுள்ளார். திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடரும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post
எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டவுள்ளார். திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடரும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In