• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முத்தையாபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
May 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முத்தையாபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பல்க் பஜாரில் பகுதி செயலாளர் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்செல்வி, பொருளாளர் முத்துராஜா, பிரதிநிதிகள் ஜலாலுதீன், தீபக்ராஜேஷ், ஸ்டாலின், ஆரோக்கிய ராபின், ஐயப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார்.

வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் காணப்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி அதிகரிக்கச் செய்து அதை சிறப்பாக கையாண்டது. இந்தியாவிலேயே எந்த முதல்வரும் செய்யாத கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கொரோனா நிவாரணமாக 2 தவணையாக ரூ.4000, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இடஓதுக்கிடு, பெண் கல்வி உதவித்தொகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல் விவசாயம் செய்யும் பரப்பு அதிகரித்துள்ளது. 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. நம்மை இடுப்பில் கட்ட சொன்ன துண்டு தற்போது தோலில் போட வலியுறுத்தியது திராவிட மாடல். கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வது மறுக்கப்பட்ட முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது திராவிட மாடல் இதனை பொறுக்க முடியாமல் தான் ஆளுநர் ரவி தினமும் ஏதாவது குட்டையை குளப்பி கொண்டு மீன்பிடிக்க திரிகிறார்கள் அதற்கு நாம் இடமளிக்க கூடாது திமுக அரசின் சாதனைகளை அனைத்து தரப்பினர் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் உள்பட புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவேண்டும். தமிழகத்திலிருந்து முதல்வர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர் என்ற நிலை உருவாக வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கடந்த 10 ஆண்டுகள் மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் திமுக வெற்றி பெற்ற பகுதிகளுக்கு மட்டுமின்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. பாஜக பொய் புகார்களை திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது சுமத்தி வருகிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது அனைத்து தகவல்களும் ஸ்மார்ட் போன் மூலம் வேகமாக பரவி வருகிறது. மகளிர்களுக்கு இலவச பஸ், நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ மாணிவிகளுக்கு வெற்றி பெற திட்டங்கள், காலை சிற்றுண்டி திட்டம், பிறந்த குழந்தை முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால் தான் வட இந்தியர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகிறார்கள் என்று பேசினார்.

கூட்டத்தில் தலைமை பேச்சாளர் போலிஸ் ஆல்பர்ட்தாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்;ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், மாநகர ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பால்ராஜ், கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பட்சிராஜ், ராஜதுரை, சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், அவைத் தலைவர்கள் ராமச்சந்திரன், பெருமாள், நாகூர்கனி, இரத்தினசாமி, பெரியசாமி, ஆரோக்கியசாமி, பூராசா, நயினார், செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், பக்கிள்துரை, சந்தனராஜ், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி நன்றியரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் சாமிதரிசனம் செய்தார்.

Next Post

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

Next Post
எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In