நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர்; அ.அருண் தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் மே 9
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் டாக்டர்;. அ.அருண் தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது, அதனைதொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ 4 கோடியே 97 இலட்சம் மதிப்பீட்டில் 46 பணிகள் 378 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபடுகிறது.
அதன்படி இன்று தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை, மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை போன்ற வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ. 16.00 இலட்சம் மதிப்பீட்டில் மண்வாரி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன் பெறும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன்;, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் .கோ.கமலக்கண்ணன், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் மு.சாக்ரடீஸ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

