• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

policeseithitv by policeseithitv
May 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் உப்பார் ஓடை உபரி நீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே தூர் வாருதல் சூழவியல் பூங்காவிற்கு மண் வழங்குதல் ரூ 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்;தார்.

மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் இக்குளம் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும். இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும், உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர். பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967இல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் 2262 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

வெள்ள நேரங்களில் கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் உபரிநீர், 24 மதகுகள் மூலம் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஓடையில் நெருக்கமாக வளர்ந்துள்ள சீமை உடை மரங்களாலும் தனியார் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் விரைவாக செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஓடையின் கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுவது தொடர்கதையாக இருந்தது.

பொதுவாக கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை பொறுத்தவரை, மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக தண்ணீரை வெளியேற்றுவதும், பயிர்கள் வெள்ளத்தில் சேதமாவதுமே தொடச்சியாக நிகழ்ந்தது. கோடை காலங்களில் அதற்கு நேர் மாறாக, குளம் தண்ணீரின்றி காய்ந்து விடுவதும், பயிர்கள் கருகி விடுவதுமே தொடர்ந்து நிகழ்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட படி பணி தொடங்கப்பட்டது.

நிகழ்;ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பூங்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஒன்றிய குழு துணைத்தலைவரும் பகுதி செயலாளருமான ஆஸ்கர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுரேஷ், சுந்தரபாண்டியன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜதுரை, முத்துவேல், விஜயகுமார், விவசாய சங்கத்தலைவர் பூபதி, செயலாளர் ரகுபதி, பொருளார் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, நிர்வாகிகள் தங்கவேல், அகஸ்டின், மதியகழன், முன்னாள் தலைவர்கள் அழகுராஜா, திருமணி, திமுக வட்டச்செயலாளர்கள் வசந்தி பால்பாண்டி, சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், கருப்பசாமி, ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் மாலா சின்கா மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சித்திரைபுஷ்பம், பகுதி துணைச்செயலாளர் கல்பனா, நீர்பாசன சங்க தலைவர் தனலட்சுமி, காலங்கரை செயலாளர் ராஜ், பிரதிநிதி ராமசந்திரன், தாமிரபரணி நதிநீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் உதவி பொறியாளார் பாஸ்டின் வினு, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, அற்புதராஜ், முத்துமாணிக்கம், பாஸ்கர், பால்பாண்டி, முன்னாள் பகுதி செயலாளர் பொன்னரசு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தாசில்தார் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,29,96,757 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி மில்லர்புரம் பர்மாகாலனி முனீஸ்வரர் கோவில் கொடை விழா

Next Post
தூத்துக்குடி மில்லர்புரம் பர்மாகாலனி முனீஸ்வரர் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மில்லர்புரம் பர்மாகாலனி முனீஸ்வரர் கோவில் கொடை விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In