• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,29,96,757 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

policeseithitv by policeseithitv
May 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,29,96,757 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

நாகப்பட்டினம் மே 5

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,29,96,757 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் , கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மகளிர்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி கிடைக்க பெறாதவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற மன நோக்குடன் அனைவரும் உதவி மனப்பான்மையுடன் இதுவரை சுமார் 1.30இலட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து கூட்டுநீர் திட்டம் வழங்கவும், மேலும் நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகளில் பேருந்து நிலையம், வேதாரண்யம் நகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம், வேளாங்கண்ணி,அக்கரைபேட்டை இடையே மேம்பாலம் கட்ட நிதி, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் வாய்மேடு பகுதியில் தடுப்பணை, மகளிர் திட்டத்தின் கீழ் நிதி போன்றவைகளை பெற்று வளர்ச்சிபாதையில் செல்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அதனைத்தொடர்ந்து இந்த விழாவில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.26,83,500 மதிப்பீட்டில் 30 மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியில் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினையும், வருவாய்துறை சார்பில் ரூ.1,50,000 மதிப்பீட்டில் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.24,000 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு இலவச பித்தளை தேய்ப்பு பெட்டியையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.55,25,000- மதிப்பீட்டில் 44 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, வங்கிகடன்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் ரூ.6,87,480 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க இணை மானிய நிதியையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குகான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.20,00,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான நிதியையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.34,527 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு பண்ணைக் கருவிகள் தொகுப்பு, கைத்தெளிப்பான், மின்கல தெளிப்பான், தார்பாய், தேனி வளர்ப்பு பெட்டிகளையும், தோட்டக்கலை துறையின் சார்பில் ரூ.16,250 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தளைகளையும், தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.58,63,000 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு டிராக்டர், டாடா ஏசி, கறவைமாடு போன்றவைகளையும், கால்நடை பராமரிப்புதுறை சார்பில் ரூ.4,000 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கு தாதுஉப்புக்கலவை, தீவனங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ரூ.60,09,000 மதிப்பீட்டில் 14 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலை என மொத்தம் ரூ.2,29,96,757 மதிப்பீட்டில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நாகப்பட்டினம் நகர மன்ற துணைதலைவர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Next Post

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Next Post
கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In