நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் உடன் உள்ளார்.
வேதாரணியம் மே 5
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது, அதனைதொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ 4 கோடியே 97 இலட்சம் மதிப்பீட்டில் 46 பணிகள் 378 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபடுகிறது.
அதன்படி வெண்மணச்சேரி வடபாதி வாய்க்கால் 2.95 கிலோமீட்டர் தூரம் வரை, ஈசனூர் வாய்க்கால் 1.00 கிலோமீட்டர் வரை, கொன்னயடி வாய்க்கால், மேட்டுப்பள்ளம் வாய்க்கால் போன்ற வாய்க்கால்கள் ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் மண்வாரி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. வெண்மணச்சேரி வடபாதி வாய்க்கால் அரிச்சந்திரா நதி வலது கரையில் வெண்மணச்சேரி வாய்க்கால் பிரிகிறது. ஆலங்குடி, வெண்மணச்சேரி கிராமம் வழியாக ஆறு கிலோமீட்டர் தூரம் சென்று ஏரி வடிகாலில் விழுகிறது இதன் பாசன பரப்பு 1,396 ஏக்கர்கள் ஆகும். மேலும், ஈசனூர் வாய்க்கால் அரிச்சந்திரா நதி வலது கரை 149.387 கிலோமீட்டர் பிரிகிரது. ஆலங்குடி, ஈசனூர் கிராமம், வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று வெண்மணச்சேரி வடபாதி வாய்க்காலில் விழுகிறது இதன் பாசனப்பரப்பு 120 ஏக்கர் பயன் பெறும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் பலராமன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

