நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
வேதாரணியம் மே 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் உடன் உள்ளனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சி, கருப்பம்புலம் ஊராட்சி தெற்குகாடு கிராமம் மற்றும் நடுக்காடு கிராமம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.14.59 இலட்சம் வீதம் என மொத்தம் ரூ.43.77 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 290 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 60 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 350 நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களின் நலனை கருதி மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி, போன்ற பல்வேறு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 11 இடங்களை காலநிலை மாற்ற திறன்மிகு கிராமங்கள் என அறிவித்து அதில் கோடியைகரை கிராமமும் ஒன்றாகும். பொது விநியோக திட்டத்தை முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்;. ரூ. 1858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி 1 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினையும் மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் பாதுகாவலராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உள்ளார்கள். அதனைத்தொடர்ந்து நம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி கிராம நியாயவிலைக்கடையில் 375 குடும்ப அட்டைத்தாரர்களும், 172 குடும்ப அட்டைத்தாரர்களும், 64 குடும்ப அட்டைத்தாரர்களும், 108 குடும்ப அட்டைத்தாரர்களும், என மொத்தம் 719 குடும்ப அட்டைத்தாரர்களும், கருப்பம்புலம் ஊராட்சி தெற்குகாடு கிராம நியாயவிலைக்கடையில் 194 Pர்ர் குடும்ப அட்டைத்தாரர்களும், 126 NPர்ர் குடும்ப அட்டைத்தாரர்களும், 30 ழுயுP குடும்ப அட்டைத்தாரர்களும், 80 யுயுலு குடும்ப அட்டைத்தாரர்களும், என மொத்தம் 430 குடும்ப அட்டைத்தாரர்களும் மற்றும் கருப்பம்புலம் ஊராட்சி நடுக்காடு கிராம நியாயவிலைக்கடையில் 247 Pர்ர் குடும்ப அட்டைத்தாரர்களும், 358 NPர்ர் குடும்ப அட்டைத்தாரர்களும், 77 ழுயுP குடும்ப அட்டைத்தாரர்களும், 100 யுயுலு குடும்ப அட்டைத்தாரர்களும், 01 யுNP குடும்ப அட்டைத்தாரர் என மொத்தம் 783 குடும்ப அட்டைத்தாரர்களும் என மொத்தம் 1932 குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக்கடை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தேத்தாக்குடி தெற்கு, ஆயக்காரன்புலம்-2, குரவப்புலம், கத்தரிப்புலம் ஆகிய ஊராட்சிகள் பரப்பளவில் அதிகமாகவும், அதிக கடைத்தெருவும் கொண்டுள்ளதால் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை நவீனப்படுத்தும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் 15வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ 33.92 இலட்சம் மதிப்பீட்டில் அதிக திறன் கொண்ட 4 மோட்டார் வாகனங்களை ஊராட்சிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கா.ப.அருளரசு, வேதாரண்யம் வட்டார ஆத்மா குழு தலைவர் உதயம் முருகையன், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சி, கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

