நாகப்பட்டினம் மே 3
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாரத் நிர்மான் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் கீழ் ரூ.290.10 இலட்சம் மதிப்பீட்டில் 3.683 கி.மீ தொலைவில் ஆலங்குடிச்சேரி முதல் அகரகொந்தகை வரையிலும், பண்டாரவடை ஊராட்சியில் ரூ 375.33 இலட்சம் மதிப்பீட்டில் 5.070 கி.மீ தூரம் சீயாத்தமங்கை, மானாம்பேட்டை, ஆற்றங்கரை சோதனைசாவடி, பண்டாரவடை முதல் போலகம் வவ்வாலடி ஊராட்சியில் ரூ 419.01 இலட்சம் மதிப்பீட்டில் 4.340 கி.மீ தூரம் மேலப்பகுதி வவ்வாலடி முதல் கீழஆமப்பட்டம் அரசூர் வரை, ஏனங்குடி ஊராட்சியில் ரூ. 410.25 இலட்சம் மதிப்பீட்டில் 5.031 கி.மீ தூரம் நெய்குன்னம் , எரவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.343.97 இலட்சம் மதிப்பீட்டில் 3.050 கி.மீ தூரம் மேலக்கரையிருப்பு முதல் கீழகரையிருப்பு, நாட்டார்மங்கலம் முதல் எரவாஞ்சேரி, மற்றும் ரூ. 411.25 இலட்சம் மதிப்பீட்டில் 4.543 கி.மீ தூரம் நெய்குப்பை பொற்காலக்குடி, பெருசாத்தாங்குடி வரை சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதையும், குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜவகர், எஸ்.பாலமுருகன், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

