நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறவுள்ள திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வெளியிட்டார்.
நாகப்பட்டினம் மே 2

நாகப்பட்டினம் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் (நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை) நடைபெறவுள்ளதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 04.05.2023 அன்று வெளியிடப்படவுள்ளது எனவும், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஊரக பகுதியிலிருந்து 09 உறுப்பினர்களும், நகர்புற பகுதியிலிருந்து 03 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.