தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையினை கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திறந்து வைத்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி பேசுகையில் ஓட்டப்பிடாரம் வட்டம் தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் இருந்து நீண்ட நாளாக 3 கி.மீ. நடந்துபோய் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வரக்கூடிய சூழல் இருந்தது. அப்படிப்பட்ட சூழலை மாற்றி உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ரேசன் கடை வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டிருக்கிறது. அருகில் உள்ள அங்கன்வாடியும், நூலகமும் விரைவில் கட்டித்தரப்படும். வருடம் முழுவதும் ரேசன் கடையில் தரமான அரிசி, பொருட்கள் வழங்கப்படுகிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கிருக்கின்ற சகோதரிகள் அரிசி மோசமாக உள்ளது, எவ்வாறு பயன்படுத்துவது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். முதலமைச்சர் ஆட்சியில் அனைவருக்கும் ரேசன் கடையில் பொருட்கள் தரமாக கிடைக்கின்றது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் சமுதாய நலக்கூடம், பேவர்பிளாக் சாலைகள், சாலைகள், வாறுகால் அமைக்க வேண்டும் என்று 15 கோரிக்கைகள் கொடுக்கப்ட்டிருக்கிறது. விரைவில் உங்கள் கோரிக்கைள அனைத்தையும் நிறைவேற்ற அத்தனை முயற்சியையும் எடுத்து விரைவில் நிறைவேற்றி தருவோம் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், குறுக்குச்சாலை ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

