தூத்துக்குடி முத்துநகர் எண்டர்டெய்ன்மென்ட் குழு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏவும் திமுக மாவட்டசெயலாளருமான பெரியசாமி நினைவாக கடற்கரை சாலையில் முத்துநகர் கடற்கரை பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வருகை தந்து முழுமையாக சுற்றி பார்த்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பொருட்காட்சியில் சிறப்பு அம்சமாக மிரட்டும் மிருகங்கள், ஸ்னோ வேல்டு, பேய்வீடு, 3 டி ஷோ, சிறுவர்கள் ஊஞ்சல், ஜெயின்ட் வீல், மெரிகப், கொலம்பஸ், போன்ற பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சி நிர்வாகி கூறுகையில் தூத்துக்குடி ஓருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ, பெரியசாமி நினைவுநாள் அடுத்த மாதம் 26ம் தேதி வருகிறது. அதை குறிக்கும் வகையிலும் பள்ளி கல்லூரி விடுமுறை வருவதால் பொதுமக்களுக்கு மணமகிழ்ச்சியை தரும் வகையில் பல்வேறு வகையில் மாநகரில் இடம் பெறாத புதுவகையான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குகொள்ளும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு வாகன நிறுத்தங்கள் முறையாக செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஜுன் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முழு ஓத்துழைப்பு கொடுத்த அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
விழாவில் மாநகர திமுக தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மீனவரணி அமைப்பாளர் டேனி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், அண்டோ, மாநகராட்சி கவுன்சிலர்கள் மெட்டில்டா, பவாணி மார்ஷல், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி ஜஸ்டின், ஹிலாரி அமெஸ்மெண்ட் உரிமையாளர் ஹெர்மன் கில்டு மற்றும் கருணா மணி அல்பட், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

