திருநெல்வேலி
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி உடன்பிறப்புகளாய் இணைவோம் என்கின்ற புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழையூத்து சங்கர்நகர், நாராயணம்மாள்புரம் பேரூராட்சிகளிலும், திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண் மூன்றிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் கதர்கிராம தொழில் அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்எஸ். ராஜ கண்ணப்பன்;, மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப், திருநெல்வேலி மேயர் சரவணன், துணை மேயர் ராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், தொழிற்சங்க செயலாளர் தர்மன், பகுதி செயலாளர்கள் தஞ்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம் என்ற கோபி, ஆண்டன் செல்லதுரை, மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் அணி நிர்வாகிகள், மாவட்ட பகுதி, ஒன்றியக், வட்ட, கிளை நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் மத நல்லிணக்க மற்றும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வாகாப், மாநகரச் செயலாளர் சுப்ரமணியன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்ய உறுதுணையாக செயல்பட்ட அத்துணை நிர்வாகிகளுக்கும் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஏசி ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.

