தூத்துக்குடி
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை நிர்வாகிகள் கோட்டாளமுத்து, ஜெகதீசன், கோபி, சீனிவாசன், மனோகர், சிவசாமி, பேச்சாளர் அனல் ராஜசேகர், மூக்குத்துரை, ராமர், ஆகியோர் ஏற்பாட்டில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர், தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் அரசு வக்கீல் ராஜாராம், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங். மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலசுப்ரமணியன், அரசு போக்குவரத்து முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சுப்புராஜ், காசி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர் காவலன், அரசு, ராஜா, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஹரி நிர்மல், சுடலைமணி, வினோத், சதிஷ், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

