• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

policeseithitv by policeseithitv
April 15, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும் அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ் திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் என்.பி.ராஜா, நான் அறிந்த மனிதமும் அரசியலும் நூலை வெளியிட்டு பேசுகையில் நான் என் வாழ்வில் இப்படி ஒர் புத்தகத்தை எழுத வேண்டும் என்று கடந்த ஒர் ஆண்டுகளாக சிந்தித்து சமுதாய அவல நிலையை எடுத்துரைத்துள்ளேன். இதன் மூலம் மகிழ்ச்சியோடு எனது தாய் தந்தையை வணங்குகிறேன். அன்னையிடம் அன்பை வாங்கலாம் தந்தையிடம் அறிவை வாங்கலாம் என்ற பழமொழிக்கேற்ப நான் படித்தேன். கல்விக்கு பின் உயர் படிப்பு படிக்க வாய்ப்பில்லை என்றாலும் தற்போது நான் வக்கீல் பட்டம் பெற்றுள்ளேன். பொதுவான சிந்தனை அதிகரிப்பின் மூலம் 2017ல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று இந்த கட்சியை தொடங்கினேன். பல்வேறு போராடங்கள் நலத்திட்ட உதவிகள் என வழங்கியுள்ளோம். இறைவன் அருளாசியோடு ஆறுமாத காலமாக கவனம் செலுத்தி இந்த பணியை முடித்துள்ளேன். இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் தாய்மார்கள் சிறுவர்கள் என அனைவருடைய வாழ்க்கை முறைப்பற்றி எழுதியுள்ளேன். மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பின் பெரியார் அண்ணா கலைஞர் என எழுத்துக்கள் பேச்சுக்கள் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து செம்மை படுத்தியதன் மூலம் பல்வேறு வசதி வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாகின எனக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் கலைஞர் வைகோ, வாஜ்பாய் அப்போது இருந்த பிஜேபி எனக்கு பிடித்தது. இப்போது உள்ள செயல்பாடுகள் ஓத்துவரவில்லை. கலைஞரின் 50 ஆண்டு சேவைகள் பெருமைக்குரியவைகள் எல்லோரையும் அரவணைத்து செல்வார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உடனே பதில் சொல்பவர்கள் தான் தலைவர்கள் அந்த வழியில் தான் வைகோவின் பேச்சாற்றலின் மூலம் அவரை நான் விரும்பினேன். அரசியலில் வாஜ்பாய், நல்ல தலைவர் அப்போது நான் அந்த இயக்கத்தில் இருந்தேன் பின்னர் தான் புரிந்து கொண்டேன் இங்கு இருந்து உழைத்தால் அது வேஸ்ட் என்று பின்னர் அதிலிருந்து விடுபட்டுக் கொண்டேன் 98ம் ஆண்டு எனக்கு மடிக்கணினி வந்த போது சில ஆண்டுகள் அதை எப்படி இயக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது தற்போது உள்ள குழந்தைகள் வளர்ந்து வரும் விஞ்ஞாண உலகில் அனைத்தையும் தெரிந்து உள்ளனர். நான் நினைப்பது சட்டமாக வேண்டும் மக்கள் வாழ்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமாக சிந்தனை கொள்கையோடு இருக்கும் இந்த கட்சி செயல்திட்டம் மற்றவர்களையும் கவரும் வகையில் உள்ளன. 2031ல் ஆட்சி அமைக்கும் ஒரு மொழியை சொல்லி மற்றவர்களின் வளர்ச்சியை சிலர் தடுக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது ஒருகோடி பேர் ஹிந்தி சரளமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள் இன்னும் சில ஆண்டுகளில் பல கோடி படித்தவர்கள் உருவாகும் நிலை வரும். மத்;திய அரசின் ஜிஎஸ்டி வரி மூலம் நல்ல வருமானம் அதன் மூலம் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் ஆயிரம் கோடி திட்டப்பணிகள் தொடங்கியது அதிகாரிகளில் பல தவறான செயல்பாடுகளால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வருகிறது. வாஞ்சிநாதனை வெள்ளையர்கள் சுட்டுக் கொன்றார்கள். சுதந்திரத்திற்காக வஉசி செக்கிழுத்து சிரமப்பட்டார். காமராஜர் நல்ல சிந்தனையுள்ள முதல்வராக பணியாற்றினார். இந்தநிலையில் தமிழகத்தில் பிஜேபி தலைவராக உள்ள அண்ணாமலை வாட்சப் பேஸ்புக் போன்ற வற்றில் எதையாவது கூறிக்கொண்டு வருகிறார். இவருக்கு அரசியல் அனுபவம் இன்னும் வரவில்லை. ஐபிஎஸ் அதிகாரி போல் தான் பேசுகிறார். இது வாக்காக வந்து சேராது. மத்திய அரசில் இரண்டு முறை தொடர்ந்து பிஜேபி ஆட்சியில் உள்ளது. 3வது முறையும் வர நினைக்கிறது. வந்தால் சர்வாதிகாரம் நடக்கும் தற்போது அந்த ஆட்சியில் நிறைய பாதிப்புகள் உள்ளன. அதை மக்கள் பேசுகிறார்கள். என்று பேசினார்.

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நாம் இந்தியர்கட்சி மாநகர செயலாளர் ரூஸ்வெல்ட், பல்வேறு அமைப்பை சேர்ந்த அழகேசன், ராமசந்திரன், ஐயாத்துரை, நூருல்லா நவாஸ், ஆறுமுகசாமி, ரிக்டர், செல்வம், தனபால், சுந்தர்சிங், மந்திரமூர்த்தி, பேச்சிமுத்து, குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பேசிய பலரும் பொதுவாழ்வில் ஈடுபட்ட மறைந்த பெரியசாமி தொழிற்சங்க தலைவராக மாவட்ட செயலாளராக நகர்மன்ற தலைவராக சட்டமன்ற உறுப்பினராக துறைமுக சபை பொறுப்புகுழு உறுப்பினராக என பல பொறுப்புகளை வகித்து இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட்டு அவர் சாந்த கட்சியின் தலைவருக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தார். அவர் பெற்றேடுத்த அனைத்து முத்துக்களுமே நல் முத்துக்களாகவே இருந்து அவரை போல் இன்று வரை பொதுவாழ்வில் ஈடுபட்டு தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் எல்லா பணிகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர். இது போன்ற குடும்பங்கள் இந்த மாவட்டத்திற்கு தேவை என்று புகாழாரம் சூட்டினார்கள்.

விழாவில் நாம் இந்தியர்கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜ், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் சின்னத்துரை, ஜேசுராஜேந்திரன், குட்டி மாரிமுத்து, பொருளாளர் சங்கரன், அவைத்தலைவர் அமிர்த்காந்தன், நெல்லை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், துணைசெயலாளர் காமாட்சிநாதன், சாயர்புரம் நகர செயலாளர் பரத், தலைவர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேல்சாமி, தலைவர் ரமேஷ்பாலன், இளைஞர் அணி செயலாளர் உடையார்; உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பெரருளாளர் ஜெயகணேஷ் நன்றியுரையாற்றினார்.

Previous Post

அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Post

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

Next Post
தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In