தூத்துக்குடி ஏப்ரல் 15
நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து
சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார், மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
செய்தி தொகுப்பு
M. கண்ணன்

